Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம்: மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி!

சென்னை வெள்ளம்: மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி!

869
0
SHARE
Ad

najib3கோலாலம்பூர் – கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிவாரண நிதியாக மலேசியா, 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4.2 மில்லியன் ரிங்கிட்) வழங்கவுள்ளதாக மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை, தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தமா எஸ்.சாமிவேலு இன்று வெளியிட்டார் என தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.