Home Featured நாடு தாப்பா கொலைகள்: “அபாயகரமான, பழக்கப்பட்ட கொலைகாரர்கள்” – என நீதிமன்றம் வர்ணித்துள்ளது!

தாப்பா கொலைகள்: “அபாயகரமான, பழக்கப்பட்ட கொலைகாரர்கள்” – என நீதிமன்றம் வர்ணித்துள்ளது!

725
0
SHARE
Ad

Tapah murdersஈப்போ – தாப்பாவில் தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தை மற்றும் மகனை, ‘அபாயகரமான மற்றும் பழக்கப்பட்ட கொலைகாரர்கள்’ என  நீதிமன்றம் வர்ணித்துள்ளது.

அவர்கள் இருவரும் கொடூர மற்றும் மனிதத்தன்மையற்ற கொலைகாரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக துணை அரசு தரப்பு வழக்கறிஞர் ஹாரிஸ் ஆங் தெரிவித்துள்ளார்.

குற்றங்களைத் தடுக்கும் சட்டம் 1959 (2012), பிரிவு 4(1)(a)-படி, அக்குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் விசாரணை மனுவை விசாரணை செய்த, நீதிபதி சுஹைமா மொகமட் நூர், “அவர்கள் மிகவும் அபாயகரமான மற்றும் பழகப்பட்ட கொலைகாரர்கள். கொலை செய்யப்பட்ட வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால்,அவர்களின் சமுதாயத்தினர் மத்தியில் இந்தக் கொலைகாரர்கள் அச்சத்தை ஏற்படுத்திவிட்டனர்” என்று நீதிபதி சுஹைமா மொகமட் நூர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குற்றவாளிகளான 57 வயதான பட்டறை உரிமையாளரையும், அவரது 20 வயது மகனையும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த சுஹைமி உத்தரவிட்டுள்ளார்.