Home Featured தமிழ் நாடு ‘இந்தியா டுடே’ ஆசிரியரின் எடக்கான கேள்விக்கு ஆர்ஜே பாலாஜி மூக்குடைப்பான பதில்!

‘இந்தியா டுடே’ ஆசிரியரின் எடக்கான கேள்விக்கு ஆர்ஜே பாலாஜி மூக்குடைப்பான பதில்!

592
0
SHARE
Ad

rjbalajiசென்னை – சென்னை பேரிடரை வெளிநாட்டு ஊடகங்களே தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம்  கொடுக்காமல், மத சகிப்புத்தன்மை குறித்து நட்சத்திரங்களின் பேட்டிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதற்கு எதிராக சித்தார்த் உள்ளிட்ட சிலர் கடுமையாக குரல் கொடுத்த பின்னரே தமிழகத்தின் பக்கம் தன் பார்வையை திருப்பின.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் தமிழகத்திற்காக குரல் கொடுத்து வந்த ‘இந்தியா டுடே’ ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் சமீபத்தில் பொதுவெளியில் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அங்கு ஆர்ஜே பாலாஜியும் மக்களுடன் மக்களாக உடன் இருந்தார். அப்போது சர்தேசாய், “மக்களை விழிப்படைய வைக்க வெள்ளம் போன்ற பேரிடர் தேவைப்படுகிறதா?” என்று கேட்டார்.

அதற்கு பாலாஜி, “நாங்கள் மட்டுமல்ல நீங்களும் (தேசிய ஊடகங்களும்) விழிப்படைய வேண்டிய தருணம் இது” என்று பதில் அளித்தார்.

#TamilSchoolmychoice

அதனை ஏற்றுக் கொண்ட சர்தேசாய், “கண்டிப்பாக இது தேசிய ஊடகங்கள் விழிப்படைய வேண்டிய தருணம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

https://www.youtube.com/watch?v=_7YgPJ5qc24