Home Featured தமிழ் நாடு தமிழக வெள்ளம்: இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!

தமிழக வெள்ளம்: இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!

591
0
SHARE
Ad

manidham5சென்னை: இன்று வெள்ளிக்கிழமை காலை வரையிலான தமிழகம் மற்றும் சென்னை வெள்ள நிலவரங்கள் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் வரை வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என மத்திய அரசாங்கம் அனுமதி.
  • பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கர் தனது பங்காக 10 இலட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.
  • இனி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என வானிலை இலாகா ஆறுதல் அறிவிப்பு
  • சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்களின் இல்லங்களை சுத்தம் செய்வதற்காக, அரை கிலோ பிளிச்சிங் பவுடர் மற்றும் 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் அமர்ந்தபடி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று இரண்டாவது நாளாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் சிந்தாதிரிப் பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து இதுவரையில் 17 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, நிவாரண மையங்களில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சுமார் 600 படகுகள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
  • இதுவரையில் 6 ஆயிரத்து 605 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • வெள்ளத்திற்குப் பின்னர் சென்னை நகரில் இதுவரை 20 ஆயிரம் டன் கழிவுகள் அரசுப் பணிகளின் மூலம் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 80 ஆயிரம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன என்றும் தகவல். இவற்றை அப்புறப்படுத்த அண்டை மாவட்டங்களில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை விட்டு கண்டனங்களைச் சம்பாதித்துக் கொண்ட நடிகர் கமல்ஹாசன், முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு  ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர் ஜீவாவும் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
  • தமிழக வெள்ளத்தின் இன்றைய முக்கிய முகமாகப் பார்க்கப்படுவது தன்னார்வலத் தொண்டர்களின் அயராத பணிகள்தான். அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் இயங்கும் ஆன்மீக இயக்கமான ஈஷாவின்  தன்னார்வத் தொண்டர்கள் இதுவரையில் சுமார் 80 ஆயிரம் பேர்களுக்கு நிவாரண உதவிகளையும், சுமார் 70 ஆயிரம் பேர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கியுள்ளனர்.