Home Featured தமிழ் நாடு “ரஜினி ஏன் கொடுக்க வேண்டும்” – மூத்த அரசியல் தலைவர் ஆவேசம்!

“ரஜினி ஏன் கொடுக்க வேண்டும்” – மூத்த அரசியல் தலைவர் ஆவேசம்!

650
0
SHARE
Ad

nallaசென்னை – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சென்னை பேரிடர் குறித்தும், நடிகர்கள் ஏன் பெரிய அளவில் நிதி கொடுக்கவில்லை என மேற்கொள்ளப்படும் விவாதங்கள் குறித்தும் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “லாரன்ஸ் 1 கோடி குடுத்தாராம், தெலுங்கு நடிகர்கள் 10 லட்சம், 20 லட்சம்னு குடுத்தார்களாம், கோடி கோடியா சம்பாதிச்ச ரஜினி 10 லட்சம்தான் குடுத்தார்னு ஒரு குரூப் கத்திகிட்டே இருக்கு. வளர்ச்சி திட்டத்துக்காக 4000 கோடி, 5000 கோடினு கணக்கு காட்டிட்டு பேருக்கு ரோடு போட்டு, ஏரிய எல்லாத்தயும் கூருபோட்டு வித்த அரசுகளையும், அதிகாரிகளையும் கேள்வி கேட்க திராணி இல்ல, இன்னும் இலவசம் எங்கின்ற பேரில் அரசு குடுக்கும் பிச்சையை வரிசைல இருந்து வாங்கிகிட்டு, இங்க வந்து நொட்டை சொல்கிறோம்.”

“ரஜினி எதற்காக தன் சொத்தை வாரி இரைக்க வேண்டும். நடிப்பது அவர் தொழில். நீ உன் சந்தோசத்துக்காக 300,400 ரூபாய் டிக்கெட் குடுத்து படம் பார்த்த. அவர் கோடிஸ்வரன் ஆகிட்டார். அவர் எதற்காக அதை திருப்பி குடுக்கணும். கார்பரேட் கம்பெனிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிகிறார்கள். ஒருத்தனாவது ஒரு ரூபாவாவது குடுத்திருப்பானா? பெப்சிகாரன தண்ணி பாட்டில இலவசமா கொடுக்க சொல்லு. கேஎப்சிய எல்லோருக்கும் சிக்கன் (கோழி) குடுக்க சொல்லு!”

#TamilSchoolmychoice

“சரவண பவன்-ஐ தோசை, சப்பாத்தி குடுக்க சொல்லு! இவர்கள் சம்பாதிக்கவில்லையா? சினிமாகாரன வெறும் சினிமாகாரனா மட்டும் பார்த்திருந்தால், தமிழகம் பல காமராஜர்களை முதல்வராக பார்த்திருக்கும். சினிமாகாரன தலைல தூக்கிவச்சி கொண்டாடியே பல பேர அரசியல்வாதியா ஆக்குனீங்க. இப்பொ எல்லா நடிகர்களும் ஆட்சியிலும் நல்லா நடிக்கிறாங்க. தமிழன் கடைசிவரைக்கும் சொந்த நாட்டில் அகதியாகவே” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லகண்ணு, 94 வயதை தாண்டியும் தமிழக மக்களின் நலனுக்காக போராடி வரும் தலைவராக பார்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.