Home Slider ‘வேற வழி இல்ல’ படப் பாணியில் உருவாகும் மிருதன்!

‘வேற வழி இல்ல’ படப் பாணியில் உருவாகும் மிருதன்!

771
0
SHARE
Ad

miruthanசென்னை – ஹாலிவுட் படங்களில் ஆண்டுக்கு ஒன்றாக வெளியாகும் ஸாம்பி (Zombie) பற்றிய படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிய களம் தான்.

இந்தப் புதிய களத்தில், முதன் முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் மலேசியாவில் எடுக்கப்பட்ட ‘வேற வழி இல்ல’. மலேசிய இயக்குநர் பிரேம்நாத் அப்படத்தை இயக்கியிருந்தார். அண்மையில் மலேசியாவில் வெளியான அப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது.

11201630_975656905780767_5548593082871402044_n1-300x171இந்நிலையில், அதே போன்ற ஸாம்பி கதையை வைத்து தமிழ்நாட்டில் முதன் முதலாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில், ‘மிருதன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது.

#TamilSchoolmychoice

திகில் மற்றும் பல்வேறு மர்மங்கள் நிறைந்த பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் மிருதனில், சமீபத்தில் 300 பேருக்கு ஸாம்பிக்களாக ஒப்பனை செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளனர்.

‘நாணயம்’ மற்றும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என வித்தியாசமான படங்கள் மூலம் விமர்சன ரீதியாக சக்தி சௌந்தர்ராஜன் பாராட்டப்பட்டு இருந்தாலும், மிருதன் அவருக்கு வர்த்தக ரீதியான வெற்றியையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.