Home Slider சென்னை பேரிடர்: மொழி பாகுபாடு இன்றி நடிகர்-நடிகைகள் நிதியுதவி!

சென்னை பேரிடர்: மொழி பாகுபாடு இன்றி நடிகர்-நடிகைகள் நிதியுதவி!

653
0
SHARE
Ad

Rains in Chennaiசென்னை – சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நடிகர்-நடிகைகளும் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். இன்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் ஜீவா 10 லட்சம் ரூபாயும், நடிகை ஹன்ஷிகா 15 லட்சம் ரூபாயும், நடிகை ஸ்ரீதிவ்யா 10 லட்சம் ரூபாயும் அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் அளித்துள்ள நிலையில், அவர் மேலும் 10 கோடி ரூபாய் அளிக்க இருப்பதாக பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.