Home Featured உலகம் டெங்குவிற்கு மருந்து கண்டுபிடிப்பு – நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் அனுமதி!

டெங்குவிற்கு மருந்து கண்டுபிடிப்பு – நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் அனுமதி!

687
0
SHARE
Ad

dengueமெக்சிகோ – ஆசியா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா என பெரும்பாலான கண்டங்களில் உள்ள மக்களை அச்சுறுத்தி வந்த நோய்களில் மிக முக்கியமானது டெங்கு. ஒரு ஆண்டுக்கு 400 மில்லியன் பேரை கடுமையாக பாதித்து, பலரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்த காய்ச்சலுக்கு, தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘டெங்வாக்சியா’ (Dengvaxia) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தினை, ‘சனோஃபி’ (Sanofi) என்ற பிரஞ்சு மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த மருந்தினை பயன்படுத்த மெக்சிகோ நாட்டின் சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 1.5 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.