Home Featured தொழில் நுட்பம் உங்களுக்காக போராடலாம் – இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மார்க் சக்கர்பெர்க் கருத்து!

உங்களுக்காக போராடலாம் – இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மார்க் சக்கர்பெர்க் கருத்து!

552
0
SHARE
Ad

markநியூ யார்க் – “அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதியுங்கள்” என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்தது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அவருக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் தன் கருத்துக்களை  பதிவு செய்துள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், “உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எனது கருத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். பாரிஸ் தாக்குதல் மற்றும் இந்த வாரத்தில் நிகழ்ந்த சம்பவம் (சான் பெர்னார்டினோ தாக்குதல்) மூலம் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியுள்ளதும், அது தொடர்பாக முஸ்லிம்களின் அச்சத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”

“அனைத்து சமுதாயத்தினருக்கு எதிராகவும் தாக்குதல் நடக்கும் பொழுது எழுந்து நிற்க வேண்டும் என எனது பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர். உங்களுக்கு எதிராக இன்று தாக்குதல் நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் சுந்தந்திரத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் அனைவரையும் பாதிக்கும்.”

#TamilSchoolmychoice

“நீங்கள் இஸ்லாமியராக இருந்தால், பேஸ்புக்கின் தலைவராக உங்களை இங்கு (அமெரிக்காவில்) வரவேற்கிறேன். உங்களின் அமைதிக்காகவும், உங்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.