கோலாலம்பூர் – மாயமான எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கக் காரணம் அதில் ஏற்பட்ட மின்சக்தி இழப்பு தான் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் எம்எச்370 விமானத்தைத் தேடி நடத்தப்பட்டு வரும் தேடுதல் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பணியகம், அண்மையில் கண்டறிந்த தகவலின் அடிப்படையில், அந்த போயிங் 777 இரக விமானத்தில் ஏற்பட்ட மின்சக்தி இழப்பு தான் அது தானியங்கி இயக்கத்திற்கு மாறி, அதன் எண்ணெய் தீரும் வரைப் பறந்து பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்த மின்சக்தி இழப்பு விமானத்தின் முக்கியக் கருவிகளை செயலிழக்கச் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.