சென்னை – தமிழகத்தில் கட்டுப்படுப்பட்டிருந்த டெங்கி காய்ச்சல் தற்போது மீண்டும் வேகமாகப் பரவி பலரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், டெங்கி காய்ச்சலின் உண்மையான நிலவரத்தை சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னையில் மட்டும் தற்போது 1000 பேருக்கும் மேல் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக தேனாம்பேட்டை மண்டலத்திலும், அடையாறு மண்டலத்திலும் உள்ள தனியார் அரசு மருத்துவமனைகளில் ஏராளமானவர்கள் டெங்கி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் முழுவதும் டெங்கிவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பட்டியிலிட்டுள்ளார்.