Home One Line P2 பாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது!

பாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது!

844
0
SHARE
Ad

மாட்ரிட்: உலகில் முதன் முதலாக டெங்கி நோய் பாலியல் உறவு மூலம் தொற்றுவதை ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

கியூபாவுக்குச் சென்றிருந்தபோது, டெங்கி ​​கிருமியால் பாதிக்கப்பட்ட தனது இணையுடன் பாலியல் உறவு கொண்ட பின்னர் மாட்ரிட்டைச் சேர்ந்த 41 வயது நபர் டெங்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாட்ரிட் மாகாண சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சூசனா ஜிமினெஸ் கூறுகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் டெங்கி தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 41 வயதான அவர் இந்த நோய் ஏற்பட்ட நாட்டிற்கு ஒருபோதும் சென்றதில்லை என்பதால் இது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தென் கொரியாவில் இதேபோன்ற  டெங்கி தொற்று கிருமியால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் சம்பந்தமாக புகார்கள் இருந்தபோதும், அது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒரே பாலின தம்பதிகளிடையே பாலினத்தால் டெங்கி கிருமி பரவுவதன் முதல் வழக்காக இது இருப்பதாக, ஸ்டாக்ஹோமில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை தளமாகக் கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (ஈசிடிசி) தெரிவித்துள்ளது.