ஷாங்காய்: இணையம் வழி வணிகம் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் அலிபாபா நிறுவனம் இன்று திங்கட்கிழமை பிரமாண்ட ஒருநாள் விற்பனையைத் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் 53.8 பில்லியன் ரிங்கிட் விற்பனையை செய்து சாதனைப்படைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த முன்னணி இணைய வணிக நிறுவனம் அலிபாபா, மின் வணிகம் சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக அலிபாபா உயர்ந்துள்ளது.
ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி மிகப்பெரிய தள்ளுபடிகளை அலிபாபா அறிவிக்கும். 2019-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் விற்பனையை பெரிய அளவில் பிரபலப்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒரே மணி நேரத்தில் பில்லியன் கணக்கான விற்பனையை அது செய்துள்ளது.
இந்த விற்பனை இதுவரையிலும் இணைய வணிகத்தில் நடந்திராத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.