Home Featured நாடு “நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” – மொகிதின் திட்டவட்டம்!

“நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” – மொகிதின் திட்டவட்டம்!

990
0
SHARE
Ad

MUHYIDDIN_PPAUH (1)கோலாலம்பூர் – அம்னோவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தான் கூறிய கருத்திற்காக, யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அம்னோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மொகிதின் யாசின், தான் கட்சியை மிகவும் நேசிப்பதாகவும், தனது செயலுக்குத் தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் மன்னிப்புக் கேட்பதற்கு எந்த ஒரு முறையான காரணமும் இல்லை. நான் கூறிய கருத்து எந்த ஒரு தனிநபரையும் தாக்கும் நோக்கில் கிடையாது. நான் கட்சியில் தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் குறித்து தான் கருத்துத் தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மொகிதின் வெளியிட்ட கருத்தில், விசுவாசம் கட்சிக்குத்தான், மாறாகத் தவறு செய்யும் தலைவனுக்கல்ல என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.