Home Featured கலையுலகம் ‘அந்த’ பாட்டுக்கு நான் இசை அமைக்கவே இல்லை – போட்டுடைத்தார் அனிரூத்!

‘அந்த’ பாட்டுக்கு நான் இசை அமைக்கவே இல்லை – போட்டுடைத்தார் அனிரூத்!

646
0
SHARE
Ad

20061765டொராண்டோ – ‘பீப்’ சாங்கில், சிம்புவுடன் சிக்கி அனிரூத்தின் பெயர் தமிழகம் எங்கும் ‘கெட்ட’ பெயராக மாறி இருக்கும் நிலையில், அந்த பாட்டிற்கு, தான் இசை அமைக்கவே இல்லை என இசை அமைப்பாளர் அனிரூத் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனிரூத் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழக மக்களுக்கு சமர்பிப்பதற்காக நான் டொராண்டோவில் நடத்தி வந்த இசை நிகழ்ச்சிக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். ‘பீப்’ சாங் குறித்து என் தரப்பு விளக்கத்தை தற்போது கொடுக்க விரும்புகிறேன். அந்த பாடல் என்னுடைய இசையிலோ, என்னுடைய வரிகளிலோ உருவாகவில்லை. அதில் நான் பாடவும் இல்லை. துரதிருஷ்டவசமாக எந்த தொடர்பும் இல்லாத எனது பெயரை இதில் இழுத்திருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.”

“எனக்கு பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதனை எனது சொந்த பாடல்கள் மூலமே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும், விரும்பத்தகாத பேச்சுக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சிம்பு ஏற்கனவே தானும், அனிரூத்து தான் அந்த பாடலை உருவாக்கியதாக அறிவித்துள்ள நிலையில், அனிரூத்தின் இந்த விளக்கம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.