ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை திருத்தவும், திமுக கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கும் சமநிலையை ஏற்படுத்துவதற்கு தற்போது இந்தியா போராடுவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதேவேளை, அமெரிக்க தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை கண்டறியும் திட்டத்தை புதுடெல்லி ஆதரிக்கவில்லை.