Home கலை உலகம் மீண்டும் ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா

மீண்டும் ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா

651
0
SHARE
Ad

indexசென்னை,மார்ச்.13- பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் நயன்தாரா- ஆர்யா இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டது.

பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதையடுத்து நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவருக்கு ஆர்யா தனது வீட்டில் விசேஷ விருந்து அளித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

அத்துடன் இருவரும் ‘ராஜா ராணி’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமானார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

படப்பிடிப்பில் இருவரும் தனிமையில் உட்கார்ந்து பேசுவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. அஜீத்தின் ‘வலை’ படத்திலும் இருவரும் சேர்ந்தது நடிக்கிறார்கள். இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் பரவின.

தற்போது மூன்றாவது தடவையாக பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆர்யா தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சியாக நடிப்பதையும் நயன்தாரா குறைத்துக் கொண்டு உள்ளார். ஏற்கனவே பில்லா படத்தில் நீச்சல் உடையில் நடித்தார்.

அதுபோன்று இனிமேல் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களிடம் கூறியுள்ளார். சமீபத்தில் கவர்ச்சியாக நடிக்கும்படி வந்த சில படவாய்ப்புகளை ஏற்காமல் ஒதுக்கி விட்டார்.