Home Featured உலகம் இந்தியர்களை குறி வைத்து ஆஸ்திரேலிய பத்திரிக்கை இனவெறி கேலிச்சித்திரம்!

இந்தியர்களை குறி வைத்து ஆஸ்திரேலிய பத்திரிக்கை இனவெறி கேலிச்சித்திரம்!

467
0
SHARE
Ad

australiaமெல்போர்ன் – ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழான ‘தி ஆஸ்திரேலியன்’, சமீபத்தில் இந்தியர்களை குறி வைத்து இனவெறியை தூண்டும் வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பில் லிக் என்பவர் வரைந்துள்ள அந்த கேலிச் சித்திரத்தில், பசியால் வாடும் இந்திய கிராமவாசிகள், சோலார் பேனல்களை (சூரியமின்சக்தி கருவிகள்) சுத்தியலால் உடைத்து உண்பது போலவும், மற்றொரு இந்தியர், மாங்காய் சட்னியை தொட்டுக் கொண்டால் இது இன்னும் சுவையாக இருக்கும் என்று கூறுவது போலவும் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தியர் உடைக்கும் அந்த சோலார் பேனலில், ஐநாவின் சின்னமும், ‘மேட் இன் சீனா’ (Made In China) என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டதற்கான காரணம், நடந்து முடிந்த பருவநிலை மாநாட்டில், இந்தியா முன் வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும், இந்தியர்கள் வறுமையில் வாடும் போது பருவநிலை குறித்து இந்தியப் பிரதமர் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும், குறிப்பாக மோடி உலக நாடுகளை ஒன்றிணைத்து உருவாக்கிய சூரிய மின்சக்தி கூட்டணியை கேலிக்கூத்தாக்கும் வகையிலும் அந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும், ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிக்கை தாங்கள் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரத்தில் எவ்வித இன வெறியைத் தூண்டும் அம்சங்களும் இல்லை என தெரிவித்து வருகிறது.