கோலாலம்பூர் – “எதை நோக்கிச் செல்கிறது கூட்டரசு அரசியலமைப்பு – அடிப்படை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் கவனிக்கப்படுகின்றனவா?” என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் டிசம்பர் 19-ம் தேதி, வழக்கறிஞர் மன்றம் (Bar Council) ஏற்பாடு செய்துள்ளது.
அதில், அரசியலமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகளில் சிறந்த அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகியோரின் பார்வையில் மேற்கண்ட தலைப்பில், பயனுள்ள விவாதங்களும், கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.
மேலும், இந்தக் கருத்தரங்கில் அஸ்டான் பைவா (மலேசிய வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்), ஆண்ட்ரியூ கூ சின் ஹாக் (வழக்கறிஞர் மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் துணைத்தலைவர்), டாக்டர் அஸ்மி ஷாரோம் (மலாயா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பிரிவைச் சேர்ந்த இணை பேராசிரியர் ஆகியோர் உரையாற்றுவது உறுதியாகியுள்ளது.
இவர்களோடு ஓய்வு பெற்ற நீதிபதிகளான டத்தோ மொகமட் ஆரிப் மொகமட் யூசோப் (மேல்முறையீட்டு நீதிமன்றம்), டத்தோ மொகமட் ஹிஷாமுடின் மொகமட் யூனோஸ் (மேல்முறையீட்டு நீதிமன்றம்) ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.
இந்தக் கருத்த்ரங்கில் பங்கேற்க விரும்புவோர், http://www.malaysianbar.org.my/index.php?option=com_docman&task=doc_view&gid=5213 இந்த இணைப்பில் சென்று அதிலுள்ள பாரத்தைப் பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கருத்தரங்கு விவரங்கள்:
நாள்: 19 டிசம்பர் 2015 (சனிக்கிழமை).
நேரம்: காலை 9.30 மணி தொடங்கி 1 மணி வரை.
இடம்: Raja Aziz Addruse Auditorium, Straits Trading Building, Unit 2-02A, 2nd Floor, 2 Leboh Pasar Besar, Kuala Lumpur.