Home Featured நாடு “திட்டமிட்டபடி டிசம்பர் 19இல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்” சக்திவேல் அறிவிப்பு

“திட்டமிட்டபடி டிசம்பர் 19இல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்” சக்திவேல் அறிவிப்பு

952
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா மத்திய செயலவை நிர்ணயித்துள்ளபடி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை கட்சிக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாடு முழுமையிலும் ஆங்காங்கு உள்ள மாநில மையங்களில் நடைபெறும் என மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் (படம்) அறிவித்துள்ளார்.

Sakthivel alagappan -Featureஇந்த வேட்புமனுத் தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டதாக ஒருசில தரப்புகள் பரப்பி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சக்திவேல் கேட்டுக் கொண்டார்.

சம்பந்தப்பட்ட மஇகா கிளைகளுக்கு டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் வேட்புமனுத் தாக்கல் குறித்து முன் அறிவிப்பு கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாகவும், சக்திவேல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறுவது குறித்து மேலும் விளக்கங்கள் பெற விரும்பும் மஇகா கிளைகள் மஇகா தலைமையகத்தையோ, மாநில அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் சக்திவேல் கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த வேட்புமனுத்தாக்கல் எந்த இடங்களில் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மஇகா கிளைகளுக்கு முன்அறிவிப்பு கடிதங்கள் வழி தெரிவிக்கப்பட்டு விட்டது.

வெளியில் இருக்கும் சகோதர மஇகா கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து செயல்பட சரியான தருணம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ள சக்திவேல், பாரபட்சமின்றி அனைத்துக் கிளைகளுக்கும் மீண்டும் வேட்புமனுத் தாக்கல் சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.