பாரிஸ் – மொரிசியசில் இருந்து பாரிசுக்கு சென்ற ஏர் பிரான்ஸ் விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வெளியானதால், கென்யாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக, பிரான்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சார்லஸ் ஒவினோ வெளியட்டுள்ள தகவலில், “நேற்று இரவு 9 மணியளவில், மொரிசியசில் இருந்து பாரிசுக்கு சென்ற ஏர் பிரான்சின் போயிங் 777 ரக விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வெளியானதால், கென்யாவின் மொய் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாலை 12.37 மணிக்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது”
“459 பயணிகள், 14 விமான ஊழியர்கள் பயணித்த அந்த விமானத்தின் கழிப்பறையில், வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.