Home Featured வணிகம் மலேசியாவின் முதல் இஸ்லாமிய விமான நிறுவனமான ரயானி ஏரின் சேவை துவங்கியது! 

மலேசியாவின் முதல் இஸ்லாமிய விமான நிறுவனமான ரயானி ஏரின் சேவை துவங்கியது! 

690
0
SHARE
Ad

Rayaniairகோலாலம்பூர் – மலேசியாவின் முதல் இஸ்லாமிய விமான நிறுவனமான ரயானி ஏரின் (Rayani Air) விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர்-லங்காவிக்கு இன்று காலை கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் இருந்து இந்த சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

தங்களது விமான சேவையின் புதிய தொடக்கம் குறித்து நிர்வாக இயக்குனர் ஜாபர் சம்ஹாரி கூறுகையில், “இந்த புதிய தொடக்கம் நன்றாக அமைந்தது. எங்கள் பயணர்களை பரிசோதித்து விமான பயணத்தை தொடங்குவதற்கு சிறிய அளவில் கால தாமதம் ஏற்பட்டாலும், எங்களின் முதல் சேவை திருப்திகரமானதாக அமைந்தது. இனி அனைத்தும் நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

RAYANI_AIR_விமான சேவையில் ஷாரியா இணக்கங்களை எதிர்பார்க்கும் பயனர்களை மனதில் வைத்து இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய சேவையில் தாங்கள் முன்னோடியாகவும், இணையற்ற சேவையாற்றப் போவதாகவும் ரயானி ஏரின் நிறுவனர் ரவி அழகேந்திரன் மற்றும் அவரது மனைவி டத்தோ கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ரயானி ஏர், இஸ்லாமிய விமான சேவையை வழங்க இருப்பதால், விமானத்தில் வழங்கப்படும் உணவு, விமான ஊழியர்கள், பயணர்களுக்கு வழங்கும் சேவை என அனைத்தும், ஷாரியா சட்டப்படியே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.