Home Featured உலகம் தாய்லாந்து சியங் மாய் நகரில் பேருந்து விபத்தில் 16 மலேசிய சுற்றுப் பயணிகள் பலி!

தாய்லாந்து சியங் மாய் நகரில் பேருந்து விபத்தில் 16 மலேசிய சுற்றுப் பயணிகள் பலி!

967
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngசியங்மாய் – வட தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரான சியங் மாய்யில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 16 மலேசியர்கள் உயிரிழந்தனர். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அவர்களின் வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி, அதைத் தொடர்ந்து அருகிலிருந்த ஒரு விளக்குக் கம்பத்திலும் மோதி, பக்கத்திலிருந்து ஒரு பள்ளத்தில் வீழ்ந்தது.

இந்த பேருந்தில் 21 மலேசியர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், மேலும் எண்மர் கடுமையான காயங்கள் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்த விவரங்களுக்குக் காத்திருப்பதாக பேங்காக்கிலுள்ள தாய்லாந்துக்கான மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரம் 11.30 மணியளவில், சியங்மாய்-சியங்ராய் சாலையில் நிகழ்ந்தது.

இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை தெரியவில்லை.