Home Slider நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

994
0
SHARE
Ad

supreme-courtபுது டெல்லி – டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில், மூன்றாண்டுகள் சிறார் இல்லத்தில் இருந்த ‘மைனர்’ குற்றவாளி நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவனின் விடுதலையை எதிர்த்து டெல்லி பெண்கள் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இன்று அந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் அமர்வு, குற்றவாளிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

“குற்றவாளியின் தண்டனை கால அளவு முடிந்து விட்ட நிலையில், அதனை நீட்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. நீங்கள் படும் கவலை ஏற்புடையது தான். ஆனால் சட்டத்தை மீறி எதுவும் செய்வதற்கு இல்லை” என்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

_nirbhayaஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அதிருப்தி அடைந்துள்ள நிர்பயாவின் பெற்றோர், இன்று மாலை ஜந்தர் மந்தர் பகுதியில் பொது மக்களுடன் சேர்ந்து, மிகப் பெரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.