Home Slider சர்ச்சைப் பாட்டை வெளியிட்டது பிரபல நடிகரா? – வழக்கில் திடீர் திருப்பம்!

சர்ச்சைப் பாட்டை வெளியிட்டது பிரபல நடிகரா? – வழக்கில் திடீர் திருப்பம்!

527
0
SHARE
Ad

actorசென்னை – தமிழகமே பற்றியும் சர்ச்சைப் பாட்டின் பின்னணியில் சிம்பு-அனிரூத் இருப்பதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய பேட்டியில் நடிகர் சிம்பு, “அனிரூத்தை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம். இதற்கு முழுபொறுப்பையும் நானே ஏற்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே இந்த பாட்டு வெளியானதற்கு, பிரபல நடிகர் ஒருவர் காரணம் என்று தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்து நடிகராக புகழ் பெற்ற அந்த நடிகர் தான், பாடலை வெளியிட்டுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தனக்கு மிக நெருக்கமாக இருக்கும் அந்த நடிகரிடம், விளையாட்டாக பதிவு செய்யப்பட்ட இந்த பாட்டை அனிரூத் அனுப்பி உள்ளார். பாடலில் இருக்கும் கெட்ட வார்த்தை, ‘பீப்’ செய்யப்பட்டு இருந்தாலும், எளிதில் யூகித்துவிடும் படி உருவாக்கப்பட்டு இருப்பதை கேட்ட நடிகர், அந்த பாட்டை தனது நட்பு வட்டத்திற்கு விபரீதம் தெரியாமல் அனுப்பி உள்ளார். அதன் பின்னர் தான் பாட்டு, நட்பு ஊடகங்களில் வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்போது காவல்துறை, நடிகரை நெருங்குவதாகக் கூறப்படுகிறது. யூ-டியூப்பில் முதன் முதலாக அந்த பாடல் வெளியாகி இருப்பதால், அந்த பாடலை வெளியிட்டது யார் என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனத்திடம் தமிழக காவல்துறை கேட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசயம் அதிகாரப்பூர்வமாக வெளியானால், நடிகர் சிக்குவது உறுதி என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அந்த நடிகர் பாட்டை வெளியிட்டிருந்தால், சிம்பு, அனிரூத்திற்கும் இந்த பாடலுக்கு தொடர்பில்லை என்று கூறி இருக்கமாட்டார் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.