Home Slider மன அழுத்தத்தால் 20 பேரை வெட்டிய பொறியாளர் சுட்டுக் கொலை – தெலுங்கானாவில் பயங்கரம்!

மன அழுத்தத்தால் 20 பேரை வெட்டிய பொறியாளர் சுட்டுக் கொலை – தெலுங்கானாவில் பயங்கரம்!

580
0
SHARE
Ad

sword-attack_ஐதராபாத் – தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பல்விந்தர் சிங். இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். சமீபத்திய போட்டித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். இந்நிலையில், இன்று அவர் அதிகாலையில் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அவர், திடீரென அருகில் இருந்த வாளை எடுத்து தனது பெற்றோரை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து வீதிக்கு வந்த அவர், தனது கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், பலத்த காயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sword-attackஇது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், வாளை போடும் படி பல்விந்தர் சிங்கை எச்சரித்தனர். ஆனால் பல்வீந்தர், அந்த எச்சரிக்கையையும் மீறி, காவல்துறை அதிகாரிகளையும் தாக்கினார்.

#TamilSchoolmychoice

வேறு வழியில்லாமல் காவல்துறையினர் பல்விந்தரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர், சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.