இது தொடர்பாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும். கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. எனது கருத்தே விஜயகாந்துக்கு விடுக்கும் அழைப்பு. மக்கள் நலக் கூட்டணியினர் விஜயகாந்தை சந்தித்தது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, மக்கள் நலக் கூட்டணியுடனான நேற்றைய சந்திப்பின் போது விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோவிடம், திமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி பேசியதாக, அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
Comments