Home Featured நாடு சியங்மாய் விபத்து: சுற்றுலா நிறுவனம், பேருந்து ஓட்டுநரின் உரிமம் இரத்து!

சியங்மாய் விபத்து: சுற்றுலா நிறுவனம், பேருந்து ஓட்டுநரின் உரிமம் இரத்து!

692
0
SHARE
Ad

Thailand accidentகோலாலம்பூர் – கடந்த வாரம் தாய்லாந்தில் சியங்மாய் நகரில், 13 மலேசியர்கள் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழக்கக் காரணமான பேருந்து விபத்து தொடர்பாக, தீவிர விசாரணை நடத்திய அந்நாட்டு போக்குவரத்து இலாகா, பேருந்து ஓட்டுநரின் உரிமத்தையும், சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்தின் உரிமத்தையும் இரத்து செய்துள்ளது.

சொம்போர்ன் புவாலுவாங் (வயது 58) என்ற அந்த ஓட்டுநரின் உரிமத்தை இரத்து செய்யுமாறு தாய்லாந்து தரைப் போக்குவரத்து இலாகா நேற்று உத்தரவிட்டுள்ளதாக ‘த பாங்காக் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அந்த பேருந்து ஓட்டுநர் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், ‘வீராபன் டூர் அண்ட் டிராவல்’ என்ற அந்த சுற்றுலா நிறுவனத்தின் மீது, சட்டத்திட்டங்களை மீறியதற்காகவும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்தை மிதமான வேகத்தில் செலுத்த ஓட்டுநருக்கு ஆலோசனை வழங்கத் தவறியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமத்தை தாய்லாந்து அதிகாரிகள் இரத்து செய்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.