Home Featured நாடு பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனை படைத்தது!

பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனை படைத்தது!

605
0
SHARE
Ad

Perak State Libraryஈப்போ – உலகிலேயே மிகப் பெரிய புத்தகப் பிரமிடை உருவாக்கிய லுக்செம்பர்க் புக்ஸ்டோர் செயின் என்ஸ்டரின் சாதனையை முறியடித்து, உலக சாதனையில் புதிய இடம் பிடித்துள்ளது பேராக் மாநில நூலகம்.

இதற்கு முன்பு கின்னசில் இடம்பிடித்திருந்த 63,377 புத்தகங்களால் ஆன பிரமிடின் சாதனையை, 70,247 புத்தகங்களால் ஆன பிரமிடைக் கொண்டு முறியடித்து கின்னஸ் சாதனையில் புதிய இடம் பிடித்துள்ளது பேராக் நூலகம்.

பேராக் மாநில நூலகம் மற்றும் இமாஜிகா செண்ட்ரியான் பெர்ஹாட்டின் கூட்டு முயற்சியில் இந்த சாதனை கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பர் மாதம் 1000 புத்தகங்களுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

இந்தப் புதிய கின்னஸ் சாதனைக்கான அறிவிப்பை கின்னஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நடுவர் (Guinness Book of Record adjudicator) அன்னா ஆர்போர்டு அறிவித்தார்.