Home Featured வணிகம் ஏர் இந்தியாவில் இனி சைவ உணவு மட்டும் தான் என்ற செய்தியால் பெரும் சர்ச்சை!

ஏர் இந்தியாவில் இனி சைவ உணவு மட்டும் தான் என்ற செய்தியால் பெரும் சர்ச்சை!

598
0
SHARE
Ad

air indiaபுது டெல்லி – இந்தியாவின் மிக முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில், இனி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. பயணிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை விமான நிறுவனம் தீர்மானிக்கக் கூடாது என்றும், இது வேண்டுமென்றே திணிக்கப்படும் செயல் என்றும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

எனினும் ஏர் இந்தியா, வெளியான செய்தி உண்மையல்ல என்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக உள்ளூர் விமானங்களில், 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் மட்டும் சைவ உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியாவின் பொது மேலாளர் கேப்டன் டி எஸ் பைஸ் கூறுகையில், “ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில், 60 முதல் 90 நிமிடங்கள் வரை செல்லும் உள்ளூர் விமானங்களில் ‘எக்கனாமிக் வகுப்பில்’ (Economic Class) பயணிக்கும் பயணிகளுக்கு இனி சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்.”

#TamilSchoolmychoice

“ஒவ்வொரு பயணிக்கும் அவர்களுக்கு விருப்பமான சைவ அல்லது அசைவ உணவை கேட்டு அதனை விமானப் பணியாளர்கள் கொண்டு சென்று கொடுப்பதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் இது நேர நெருக்கடியை ஏற்படுத்துகிறது.”

“சைவ உணவுக்காரர்களால் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அதே சமயம் அசைவ உணவுக்காரர்கள், சைவ உணவை எடுத்துக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.