Home Featured தமிழ் நாடு செய்தியாளர்களைக் காறித் துப்பிய விஜயகாந்த் – பத்திரிக்கைகள் கடும் கண்டனம்

செய்தியாளர்களைக் காறித் துப்பிய விஜயகாந்த் – பத்திரிக்கைகள் கடும் கண்டனம்

902
0
SHARE
Ad

vijayakanth (1)சென்னை – தேமுதிக சார்பில் சென்னை போரூரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த, இரத்த தான முகாமில் கலந்து கொண்ட பின், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பாத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை விஜயகாந்திடம் கேட்டனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், 2016 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த், “2016-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே..பயப்படுவீங்க.. பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ..” என்று ஆவேசமாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், அவர்களை அவமதிக்கும் விதமாக விஜயகாந்த் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் காணொளியைக் கீழே காண்க: