Home Featured கலையுலகம் “தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிம்புவிற்காக மன்னிப்பு கேட்கத் தயார்” – நாசர்

“தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிம்புவிற்காக மன்னிப்பு கேட்கத் தயார்” – நாசர்

776
0
SHARE
Ad

simbuசென்னை – சிம்பு விவகாரத்தில், நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என நடிகை ராதிகா கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், சிம்பு மன்னிப்புக் கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவிற்கு வந்திருக்கும். ஆனால் சட்டப்பூர்வமாக, அதனை சந்திக்க விரும்புவதாக அவர் தெரிவித்ததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாசர் அளித்துள்ள விளக்கத்தில், “இந்த பிரச்னையை பொறுத்த வரை, இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றுதான் சங்கமும் விரும்புகிறது. தம்பி விஷாலும், கார்த்தியும் தொடர்ந்து சிம்புவிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இதிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவிற்கு வந்திருக்கும். அதை முன்னிறுத்திதான் நாங்கள் பேசினோம்.”

“நானும், பொன்வண்ணனும் டி.ஆரிடமும் பேசினோம். ஆனால் அவர்கள் அதனை சட்டப்படி சந்திப்பதாகக் கூறினார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வேறு ஏதும் சொல்ல முடியாது. சிம்புவின் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அதனை ஏற்றுகொள்ள மாட்டர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.