Home Featured கலையுலகம் சாதனை படைக்கும் ஸ்டார் வார்ஸ் – 12-வது நாளில் 1 பில்லியன் டாலர் வசூல்!

சாதனை படைக்கும் ஸ்டார் வார்ஸ் – 12-வது நாளில் 1 பில்லியன் டாலர் வசூல்!

572
0
SHARE
Ad

stars2கோலாலம்பூர் – டிசம்பர் 17-ம் தேதி, உலகம் எங்கிலும் வெளியான ஸ்டார் வார்ஸ் படத்தின் தொடர்ச்சியான, ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேகன்ஸ், 12 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை ஈட்டி புதிய சாதனை நிகழ்த்தி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, அப்படத்தின் விநியோகஸ்தரான வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

stars1இது தொடர்பாக வால்ட் டிஸ்னி கூறுகையில், “இது வரை படம் (ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேகன்ஸ்) 1.09 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. வட அமெரிக்காவில் தான் பெருமளவு வசூல் ஈட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

Lupita Nyong'o, Daisy Ridley, John Boyega, J.J. Abrams, Carrie Fischer, Adam Driver, Harrison Fordஹாலிவுட் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் சீனாவில், இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி தான் வெளியாகிறது. அதற்குள்ளாகவே பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை நிகழ்த்தி உள்ளதால், சீனாவில் இப்படம் வெளியாகும் போது, இன்னும் அதிகமான வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பகிறது.