Home Featured நாடு கூரையில் சிலுவைத் தோற்றம்: சிக்கலில் வீடமைப்பு நிறுவனம் – சாயம் பூச ஏற்பாடுகள் தீவிரம்!

கூரையில் சிலுவைத் தோற்றம்: சிக்கலில் வீடமைப்பு நிறுவனம் – சாயம் பூச ஏற்பாடுகள் தீவிரம்!

949
0
SHARE
Ad

Cross symbolலங்காவி – லங்காவியில் புதிதாகக் கட்டுப்பட்டிருந்த குடியிருப்புப் பகுதி ஒன்றில், வீட்டின் மேற்கூரையில் காற்றுப்புகுவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாகள், சிலுவை போல் காட்சியளிப்பதாகக் கூறி கடந்த வாரம் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் தகவல்கள் பரவின.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சில அவற்றின் மேல் சாயம் பூசி அதனை மறைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பின் வீடமைப்பு நிறுவனம், தற்போது அதன் மேல் சாயம் பூசும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் அப்பணி நிறைவடையும் என்றும் கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கான ரியல் எஸ்டேட் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் (Real Estate and Housing Developers’ Association) தலைவர் டத்தோ ரிக் செங் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கெடாவில் எங்களிடம் வீடு வாங்கும் பெரும்பாலானவர்கள் மலாய்க்காரர்கள் தான். நட்பு ஊடகங்களில் யார் அது போன்ற படங்களையும், தகவல்களையும் பரப்பினார்களோ அவர்களின் செயலைக் கண்டிக்கிறேன்” என்று ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் வீடமைப்பிற்கான கெடா மாநில செயற்குழுத் தலைவர் டத்தோ தாஜுல் உருஸ் மாட் ஜாயின் கூறுகையில், இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை, அந்த வீடமைப்பு நிறுவனமும் சிலுவை வைக்கும் நோக்கத்தோடு கட்டவில்லை, என்றாலும் இந்த விவகாரம் நட்பு ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருவதால், அதன் மேல் சாயம் பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.