Home Featured இந்தியா வலியச் சென்று கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் திமுக – தேமுதிக-வை அடுத்து காங்கிரசுக்கு அழைப்பு!

வலியச் சென்று கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் திமுக – தேமுதிக-வை அடுத்து காங்கிரசுக்கு அழைப்பு!

862
0
SHARE
Ad

karuna1_350_101512073920சென்னை – சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தேர்தல் குறித்தும், ஜல்லிகட்டு விவகாரங்கள் குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, தேமுதிக-வுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தீர்கள். அதைப் போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடும் போது காங்கிரசை நாங்கள் விலக்கி விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில், தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வரிசையில் காத்துக் கிடந்த காலம் போய், தற்போது தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக-வையும், காங்கிரசையும் கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு திமுக தானே வலியவந்து கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.