Home உலகம் சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

588
0
SHARE
Ad

telescope-2சான்டியாகோ, மார்ச்.14- சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் அண்டவெளி உள்ளிட்டவற்றை அருகில் காணும் வகையில் தொலைநோக்கிகள் அமைக்கப்படுகின்றன.

பொதுவாக, தொலைநோக்கிகள்  ஒளி அலைகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.

#TamilSchoolmychoice

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள பாலைவன த்தில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான, “அல்மா லார்ஜ் மில்லி மீட்டர் அர்ரே’ அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:-

இந்த தொலைநோக்கி ரேடியோ அலைகளால் இயங்குவதால், விண்வெளியில் உள்ள மாசுகளையும் தாண்டி வெகு தொலைவில் உள்ள கோள்களையும் இதன் மூலம் காணமுடியும்.

கோள்களின் தன்மை அண்டவெளி உருவானது எப்படி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தில் இத்தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. சிலி பாலைவனம் மிகவும் வறண்டது என்பதால் மனிதர்கள் நடமாட்டம் குறைவு. இதனால் இப்பகுதியில்  விளக்குகள் இல்லை.

காற்றில் உள்ள ஈரத்தன்மை ரேடியோ அலைகளை உறிஞ்சிவிடும் என்பதால் தொலைநோக்கி அமைக்க வறட்சியான இப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள  இந்த தொலைநோக்கி 66 ஆன்டெனாக்களை கொண்டது.

கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் இங்கு பணிபுரிபவர்கள் மூச்சு திணறாமல் இருக்க பிராணவாயு சிலிண்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தொலைநோக்கி ஹபுள் விண்வெளி தொலைநோக்கியை விட 10 மடங்கு துல்லியமானது என்பது குறிப்பிடத்தக்கது.