Home உலகம் டெக்சாஸ் பல்கலைக்கழகத் தலைவராக இந்தியர் தேர்வு

டெக்சாஸ் பல்கலைக்கழகத் தலைவராக இந்தியர் தேர்வு

557
0
SHARE
Ad

Garbari-Texas-University-Presidet-Sliderவாஷிங்டன்,மார்ச்.14- அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக தலைவராக இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் உயர் பதவியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இந்தியரான வி.எம்.கர்பாரி (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் படித்த கர்பாரி  தற்போது, அலபாமா பல்கலைக் கழகத்தின் துணை தலைவராக உள்ளார்.

#TamilSchoolmychoice

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையின் துணை தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர்  200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

டெக்சாஸ் பல்கலைக்கழக தலைவர் பதவிக்காக, கடந்த மாதம் நடந்த தேர்வில் இவரது பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் கீழ் ஒன்பது பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆறு மருத்துவ கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் இரண்டு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.