Home Featured நாடு “தற்காத்துக் கொள்வது உங்கள் உரிமை – அதற்காக கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது” – ஐஜிபி

“தற்காத்துக் கொள்வது உங்கள் உரிமை – அதற்காக கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது” – ஐஜிபி

1036
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு முன் குற்றவியல் சட்டம் பிரிவு 99-ன் சட்டவிதிகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளலாம் அதற்காக, கொலை செய்ய எந்தவகையிலும் சட்டத்தில் இடமில்லை என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

திரெங்கானுவில் தனது வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் ஒருவனை அந்த வீட்டின் உரிமையாளர் சுல்கிப்ளி கொலை செய்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனை குறித்து கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

அவர் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம், சட்டப்பிரிவு 302 -ன் கீழ் கொலைக் குற்றமும், சட்டப்பிரிவு 326-ன் கீழ் வேண்டுமென்றே ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய குற்றமும் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை அறிந்த பொதுமக்கள், தங்களது பேஸ்புக்கில் மலேசிய சட்டதிட்டங்களையும்,அரசாங்கத்தையும், நீதித்துறையையும், மிக மோசமான வகையில் விமர்சித்து வருகின்றனர்.

அதை அறிந்த காலிட், வழக்கறிஞர் சங்கமும், மனித உரிமை ஆணையமும், மக்களுக்கு ஏன் சட்டத்திட்டங்கள் குறித்து போதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒருவர் நம்மை கொள்ளையடித்தால், அவரை நாம் கொல்லலாம் என்று இல்லை. தற்காத்துக் கொள்ளுதல் பற்றி குற்றிவியல் சட்டம் பிரிவு 99 தெளிவாகச் சொல்கின்றது. அது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் (காவல்துறைக்கும்) தான்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.