Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்! (காணொளி)

விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்! (காணொளி)

511
0
SHARE
Ad

சென்னை – பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் விதமாக நடந்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து இன்று பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் விஜயகாந்த் வீட்டை முற்றுகை இட முயன்ற போது பத்திரிக்கையாளர்கள்  மீது தேமுதிக தொண்டர்கள் கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர்.

இந்த தாக்குதலில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்தத் தாக்குதல் தொடர்பாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி உட்பட 20 பேரைக் கைது செய்துள்ளனர். பத்திரிக்கையாளர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்களின் போராட்டம், அடுத்தகட்டமாக பெரிய அளவில் வலுக்கும் என்று கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும் காணொளி

#TamilSchoolmychoice