Home Featured கலையுலகம் சிம்புவுக்கு புத்தாண்டு ஆறுதல்: ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம் வெளியானது!

சிம்புவுக்கு புத்தாண்டு ஆறுதல்: ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம் வெளியானது!

711
0
SHARE
Ad

Acham Yenbathu Madamaiyada-posterசென்னை – ‘பீப்’ பாடல் சர்ச்சையில் சிக்கித், தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுவது ஒருபுறம், உலகமெங்கும் பெண்கள் அமைப்புகளின் கண்டனங்கள் இன்னொரு புறம் என 2015ஆம் ஆண்டின் சர்ச்சை நாயகனாகத் திகழ்ந்த நடிகர் சிம்புவுக்கு பிறக்கின்ற புத்தாண்டு ஒரு மெல்லிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளது.

புத்தாண்டு பிறந்த நேரத்தில் சிம்புவின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி வரும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்ப்படங்கள் நள்ளிரவு 12.00 மணிக்கு இணையத் தளங்களில் வெளியிடப்படும் இப்போதைய நடைமுறைகளின்படி புத்தாண்டு பிறந்த நேரத்தில் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை கௌதம் வெளியிட்டு சிம்புவுக்கு ஆறுதல் தந்துள்ளார்.

#TamilSchoolmychoice

கௌதம் வாசுதேவ் மேனன், அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு இயக்கும் படம் – சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு இணையும் இரண்டாவது படம் – ஏஆர்.ரஹ்மான் இசை – என பல கோணங்களிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘அச்சம் என்பது மடமையடா’.

சிம்புவின் மனதுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவைப்படும் வாசகத்தைத் தலைப்பாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-