Home Featured உலகம் ஐஎஸ் மிரட்டலால் புத்தாண்டு முன்னிரவில் மூனிக் நகர இரயில்கள் நிறுத்தப்பட்டன

ஐஎஸ் மிரட்டலால் புத்தாண்டு முன்னிரவில் மூனிக் நகர இரயில்கள் நிறுத்தப்பட்டன

462
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து புத்தாண்டுக்கு முதல் நாளோ, புத்தாண்டிலோ புதிய தாக்குதல்கள் அரங்கேற்றப்படும் என அச்சம் நிலவிய காரணத்தால் ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு சில இரயில்கள் நிறுத்தப்பட்டன.

சில ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் மூனிக் நகரின் இரண்டு முக்கிய இரயில் நிலையங்களை மூடினர். மூனிக் நகரின் தலையாய இரயில் நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.

தீவிரவாதத் தாக்குதலுக்கான மிரட்டல்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும் ஜெர்மானியக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தத் தாக்குதல் தற்கொலைத் தாக்குதலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏறத்தாழ 550 கூடுதல் காவல் துறையினர் நகரைச் சுற்றி வளைத்துள்ளனர்.

குறிவைக்கப்பட்ட இரண்டு இரயில் நிலையங்களை நோக்கி எந்த இரயிலும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், அந்த இரண்டு இரயில் நிலையங்களைச் சுற்றி இருந்த இறுக்கமான சூழ்நிலை தற்போது சற்றே தளர்ந்துள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.