மூனிக் நகரின் மைய இரயில் நிலையமும், பாசிங் என்ற வட்டாரத்திலுள்ள மற்றொரு இரயில் நிலையமும் தற்போது பயணிகளுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தாலும், அங்கு வரும் தனி நபர்கள் மீது பரிசோதனைகள் நடத்தப்படும் எனக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
புலனாய்வு அமைப்புகள் கூட்டாக துப்பறிந்து கண்டுபிடித்துத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று இந்த இரண்டு இரயில் நிலையங்களும் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
சில பிரெஞ்சு புலனாய்வு அமைப்புகள் தந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.