Home Featured தமிழ் நாடு வைகோ-ஜி.கே.வாசன் சந்திப்பு! மக்கள் நலக் கூட்டணியில் இணைய அழைப்பு!

வைகோ-ஜி.கே.வாசன் சந்திப்பு! மக்கள் நலக் கூட்டணியில் இணைய அழைப்பு!

553
0
SHARE
Ad

சென்னை – புத்தாண்டு பிறந்திருக்கும் இவ்வேளையில், தமிழக அரசியலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது.

நேற்று, அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி, ஜெயலலிதா தீர்மானங்களை நிறைவேற்றி, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் நோக்கில் உரையாற்றியிருப்பது,  அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Vaiko-vasan-thirumaஇந்நிலையில் இன்று மாலையில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக மதிமுக தலைவர் வைகோ, தமிழ் மாநிலக் காங்கிரஸ் (த.மா.கா) தலைவர் ஜி.கே.வாசனுடன் சந்திப்பு நடத்தியிருப்பதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகக் கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தமாகாவும், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தால், அது ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகின்றது.

ஆனால், கூட்டணியாக இயங்கத் தயார் என ஜெயலலிதா நேற்று அறிவித்திருப்பதன் மூலம்,  வாசன் அதிமுகவுடன் இணயலாம் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன. வேறு வழியின்றி காங்கிரஸ், திமுகவுடன்தான் இணையும் என்பதால், வாசன் திமுக கூட்டணியைத் தவிர்த்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ள கட்சிகளாக, சரத்குமாரின் கட்சி, வாசனின் தமாகா, பாஜக, மற்றும் மற்ற சில சிறிய கட்சிகள் மட்டுமே பார்க்கப்படுவதால், வாசன் அதிமுகவுடன் இணைந்தால், அவருக்கு அங்கு அதிகமான சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது.

அதனால் அவர் ஜெயலலிதாவுடன் கைகோர்க்கும் சாத்தியங்களே அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கருதிக் கொண்டிருந்த வேளையில், இன்று வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இணைந்து வாசனைச் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.