Home Featured கலையுலகம் பீப் பாடல் விவகாரம்: சிம்புவிற்கு முன் ஜாமீன்!

பீப் பாடல் விவகாரம்: சிம்புவிற்கு முன் ஜாமீன்!

598
0
SHARE
Ad

simbu- chennai high courtசென்னை – பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்புவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

சர்ச்சைக்குரிய பீப் பாடல் தொடர்பாக, கோவையில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையினர் சிம்புவிற்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கத்தில், சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிம்புவிற்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.