Home Featured உலகம் பற்றி எரியும் 60 மாடிக் கட்டிடம் – செல்ஃபி மோகத்தில் தம்பதி!

பற்றி எரியும் 60 மாடிக் கட்டிடம் – செல்ஃபி மோகத்தில் தம்பதி!

767
0
SHARE
Ad

ar_atikiAbdulRahman Alateeqidubai hotel fireதுபாய் – புத்தாண்டு அன்று இரவு துபாயில், புர்ஜ் கலீபா கட்டிடத்தின் அருகேயுள்ள ‘தி அட்ரஸ்’ என்ற நட்சத்திர விடுதியில், கடும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்வத்தில், 16 பேருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வானவேடிக்கைகளில் இருந்து தீப்பற்றியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பற்றி எரியும் கட்டிடத்தை பின்னணியாகக் கொண்டு, சிரித்த படி தம்படம் (செல்ஃபி) எடுத்து, அதனை இணையத்தில் வெளியிட்ட தம்பதிக்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

#TamilSchoolmychoice

ஒரு கட்டிடம் எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் முன்னால் சிரித்துக் கொண்டே தம்படம் (செல்ஃபி) எடுப்பது வெட்கக் கேடானது என டுவிட்டர் வாசிகள் அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.