சென்னை – அதிமுகவின் துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத், விலக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு வைகோ, “அவர் என்னை பற்றி புகழ்ந்து பேசிய மட்டுமே என் நினைவில் இருக்கிறது. நாஞ்சில் சம்பத் நீக்கம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், வைகோ குறித்தும், மக்கள் நலக் கூட்டணி குறித்தும் சம்பத் கடுமையாக விமர்சித்ததே அவரின் பதவி பறிப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக தலைமையின் பார்வை, மக்கள் நலக் கூட்டணியின் பக்கம் திரும்பி உள்ளதாகவும், இந்நேரத்தில், சம்பத்தின் பேச்சு தேவையற்ற சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.