Home Featured நாடு மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7 பேர்...

மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7 பேர் மத்திய செயலவைக்கு நியமனம்!

950
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. அதுவரை நடப்பு தலைமைப் பொருளாளராக டத்தோ ஜஸ்பால் சிங் செயல்பட்டு வருவார்.

Murugiah T. DatoSunther Subramaniamமஇகாவின் தலைமைச் செயலாளராக அ.சக்திவேல் தொடர்ந்து நீடிக்கின்றார்.

அதேவேளையில், மஇகா மத்திய செயலவைக்கு எஞ்சியிருந்த 7 நியமன உறுப்பினர்களையும், சுப்ரா அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி.முருகையா (படம்-இடது), முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் புதல்வர் சுந்தர் சுப்ரமணியம் (படம் – இடது) மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மணியம், சிப்பாங் தொகுதித் தலைவர் குணாளன், அம்பாங் தொகுதியைச் சேர்ந்த கிளைத் தலைவர் ஜேம்ஸ் காளிமுத்து, கிளானா ஜெயா தொகுதித் தலைவர் டத்தோ எஸ்.எம்.முத்து, சுபாங் தொகுதியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் ஆகியோரே அந்த எழுவராவர்.

மஇகா தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட எழுவரும் கலந்து கொண்டனர்.

மத்திய செயலவைக்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சருமான சுப்ரா இந்த புதிய நியமனங்களை அறிவித்தார்.