Home Featured நாடு சுங்கை தோங்காக் ஆற்றில் பாக்சைட்டால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பா? – பகாங் மக்கள் அச்சம்!

சுங்கை தோங்காக் ஆற்றில் பாக்சைட்டால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பா? – பகாங் மக்கள் அச்சம்!

759
0
SHARE
Ad

Sungai Tonggakபகாங் – பாக்சைட் கலப்பு காரணமாக பகாங்கில் கெபெங் பகுதியைச் சேர்ந்த சுங்கை தோங்காக் ஆற்றில் 100-க்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மீன்வளத்துறை “அது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல” என்று தெரிவித்துள்ளது.

அந்த ஆற்றின் நீரை பலகட்ட பரிசோதனை செய்த பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளதாக பகாங் மீன்வளதுறை இயக்குநர் அட்னான் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் மீன்களின் இறப்பிற்கு மண்ணோ, சேறோ காரணமல்ல என்றும், அந்தப் பகுதியில் சுங்கை தோங்கோக் தவிர மற்ற ஆறுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (The Star)