Home Featured உலகம் அமெரிக்கத் துப்பாக்கிக் கலாச்சாரம்: கண்ணீர் விட்டு அழுத ஒபாமா!

அமெரிக்கத் துப்பாக்கிக் கலாச்சாரம்: கண்ணீர் விட்டு அழுத ஒபாமா!

921
0
SHARE
Ad

Emotional Obama calls for 'sense of urgency' to fight gun violenceவாஷிங்டன் – அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் தொடர்ந்து உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் ஆயுதங்களில் ஆளுமை செலுத்தி வரும் அமெரிக்காவால், உள்நாட்டில் சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

துப்பாக்கிப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ள ஒபாமா, நேற்று இது தொடர்பாக நாட்டு மக்கள் முன்பு உரையாற்றினார். ஒருகட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு முன்பு 20 பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த ஒபாமா, அதனை தடுக்க முடியாமல் போனது குறித்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.

“நான் எப்போதும் அந்தக் குழந்தைகளை நினைக்கும் போது பைத்தியமாகிவிடுகிறேன். ஆயுதங்களைத் தாயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளைக் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவைக் கட்டுப்படுத்த முடியாது.

#TamilSchoolmychoice

“நம் அனைவருக்கும் தெரியும் வன்முறை முழுவதையும் கட்டுப்படுத்த முடியாது என்று.  உலகம் முழுவதும் உள்ள தீமைகளை அழிக்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட ஒன்றால் (துப்பாக்கிக் கலாச்சாரம்) ஏற்படும் தீமையைக் கட்டுப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிபராக மிக விரைவில் ஒபாமாவின் பதவிக் காலம் முடிய இருக்கிறது. அதற்குள் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என ஒபாமா பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். எனினும், பல்வேறு வழிகளில் அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் சிஎன்என் நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் கூட, துப்பாக்கிக் கலாச்சார ஒழிப்பிற்கு தனிச்சட்டம் கொண்டு வருவதற்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும், எதிராக 51 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.