இந்நிலையில் இதுகுறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க உகந்த தகவல்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் மற்றும் அமைப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம், மோடி வலியுறுத்தி உள்ளார்.”
“அதற்கு, உறுதியான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.